கல்வி கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக என்எஸ்டிஎல் நிறுவனம் சார்பில் www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் செயல்படுகிறது.மத்திய நிதியமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்தின் வழிகாட்டுதலில் இந்த இனையதளம் இயங்குகிறது. இதன்மூலம் அவரவர் பகுதியில் உள்ள ஏதேனும் 3 வங்கிகளில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். சரியான காரணம் இன்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் pgportal.gov.in இணையம் வாயிலாக பிரதமருக்கு நேரடியாக புகார் தெரிவிக்கலாம். இதன்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *