மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க…

மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க…எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

ழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பி மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை தொடக்கூடாது.

இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஈரமான கையுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை தொடக்கூடாது.

மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. அதில் கொடி, கயிறு கட்டி துணிகளை காயவைக்கக்கூடாது.

மழையின்போது மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது.

பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

குளியல், கழிப்பறைகளில் சுவிட்சுகள் இருக்கக்கூடாது. இடிமின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்கக்கூடாது.

மின்னல் பாயும்போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணி அடிக்கக்கூடாது. மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்த தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது.

உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *