நாமே சொத்து பத்திரத்தை தயாரிப்பது எப்படி?

தமிழக பதிவுத் துறையின் tnreginet.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் லாகின் செய்ய வேண்டும்.

அதன்பின் பயனாளர் பெயர் (user name), பாஸ்வேர்டை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
இதைத் தொடர்ந்து பதிவு செய்தல்-ஆவணப் பதிவு, ஆவணத்தை உருவாக்குக என்பதை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு எந்த வகை பத்திரம் என்பதை தேர்வு செய்து சொத்தை விற்பவர் மற்றும் தாய் பத்திர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


எழுதிக் கொடுப்பவர் பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொது அதிகாரம் (பவர் ஆப் அட்டர்னி) ஏதேனும் இருந்தால் முகவர் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 சாட்சிகள் விவரங்கள் வேண்டும். சொத்தின் சர்வே எண், பரப்பளவு உள்ளிட்டவற்றையும் மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்.


இறுதியில் கட்டணத்தை செலுத்தி, பத்திரத்தை வெள்ளைத் தாள் அல்லது முத்திரைத் தாளில் பிரதி எடுத்து முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாள், நேரத்தில் சொத்தை பதிவு செய்யலாம். பிழைகள் இருந்தால் பதிவுக்கு முன் உரிய வகையில் திருத்திக் கொள்ளும் வசதியும் இணையத்தில் செய்யப்பட்டுள்ளது.


இந்த இணையம் ஆகஸ்ட் 2-ம் தேதி 10 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *