கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி? என்பது குறித்த விரிவான தகவல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய www.cowin.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

இணையத்தில் நுழைந்து செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதன்பின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக ஓடிபி பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும்.

இதன்பின் முன்பதிவுக்கான பக்கம் திறக்கும். அதில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு வலது ஓரத்தில் இருக்கும் Register பகுதியை கிளிக் செய்ய வேண்டும். முன்பதிவு உறுதி செய்யப்பட்ட தகவல் செல்போனுக்கு வரும்.

முன்பதிவு முடிந்தவுடன் Account Details பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்யலாம். 

ஒரு செல்போன்  எண்ணில் இருந்து 4 பேருக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனினும் அனைவருக்கும் தனித்தனியாக விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதே பாணியில் ஆரோக்கிய சேது செயலிலும் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். கோவின் செயலியில் முன்பதிவு செய்ய முடியாது. அந்த செயலி நிர்வாக பயன்பாட்டுக்கானது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *