2015 ல் கூகுள் தனது கூகுள் அசிஸ்டண்ட்டில் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்ப உதவுகிறது. அடுத்த ஆண்டு, ஆப்பிளின் சிரி அதே அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலிருந்து குரல் மூலம் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
கூகுள் அசிஸ்டண்ட்டை செயல்படுத்த “ஹே கூகுள்” என்று சொல்ல வேண்டும். நீங்கள் இப்போது, ”send a WhatsApp message” என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து, நீங்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப விரும்பும் நபரின் பெயரை சொல்ல வேண்டும் . நீங்கள் என்ன மெசேஜ் அனுப்ப விரும்புகிறீர்கள் என்று கூகிள் அசிஸ்டண்ட் கேட்கும். இப்போது, நீங்கள் சொல்ல விரும்பும் செய்தியை உரக்கப் பேசுங்கள், நீங்கள் தட்டச்சு செய்ய உங்கள் விரல்களைப் பயன்படுத்தாமல் அது அனுப்பப்படும். இதன் மூலம், நீங்கள் தட்டச்சு செய்யாமல் கூகிள் அசிஸ்டண்டின் உதவியுடன் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம்.