கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு செப். 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பதற்கான காலஅவகாசம் அக். 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.