ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் ஹரியாணா இளைஞர் முதலிடம் தமிழக மாணவர் 7-வது இடம்

சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கு மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வு நடத்துகிறது. முதல்நிலை, பிரதான நிலை, நேர்காணல் என 3 நிலைகளில் தேர்வு நடத்துகிறது.

ஐஏஎஸ் தேர்வில் 2-ம் இடம் பிடித்த ஜதீன் கிஷோர்
ஐஏஎஸ் தேர்வில் 2-ம் இடம் பிடித்த ஜதீன் கிஷோர்


கடந்த 2019 ஜூனில் முதல்நிலைத் தேர்வும் அதன்பின் செப்டம்பரில் பிரதான தேர்வும் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நேர்காணல் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நேர்காணல் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் மீண்டும் நேர்காணல் தொடங்கியது.


இந்த சூழ்நிலையில் இறுதி முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 829 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹரியாணாவை சேர்ந்த பிரதீப் சிங் முதலிடத்தைப் பிடித்தார். டெல்லியை சேர்ந்த ஜதீன் கிஷோர் 2-வது இடத்தையும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரதீபா வர்மா 3-வது இடத்தையும் பெற்றனர்.

ஐஏஎஸ் தேர்வில் 3-வது இடத்தை பிடித்த பிரதீபா வர்மா
ஐஏஎஸ் தேர்வில் 3-வது இடத்தை பிடித்த பிரதீபா வர்மா


தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ் குமார் தேசிய அளவில் 7-வது இடத்தைப் பிடித்தார். பண்ருட்டி மருங்கூரை சேர்ந்த ஐஸ்வர்யா தேசிய அளவில் 47-வது இடத்தைப் பெற்றுள்ளார்.


மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி பூர்ண சுந்தரி தேசிய அளவில் 286-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழத்தை சேர்ந்த 44 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *