ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வு.. 8 லட்சம் பேர் எழுதினர்…

ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வை  8 லட்சம் பேர் எழுதினர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகலுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. 

இந்த ஆண்டுக்கான ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 8 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 72 நகரங்களில் தேர்வு நடைபெற்றது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *