ஐசிஎப் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐசிஎப் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் (ஐசிஎப்), தொழிற் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் 480 பேருக்கும் ஐடிஐ முடித்த 510 பேருக்கும் தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தொழிற்பயிற்சியின்போது உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.pbicf.in இணையதளம் வாயிலாக செப். 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினர் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *