ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை. ஜேஇஇ நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணே போதுமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், “ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவன சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை. தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. ஜேஇஇ நுழைவுத் தேர்வே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


வரும் செப்டம்பரில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள், பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *