தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை 13 சதவீதமாகவும் அதனுடன் சேர்த்து வசூலித்த தொகையை 11.52 ரூபாயாகவும் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.