நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகள்…

நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகள் என்ற தலைப்பில் மிக முக்கிய செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

ஆகஸ்ட் 24-ல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு கடந்த 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கொரோனாவானால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு காரணமாக இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பி.இ.. அசல் சான்றிதழை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் பொறியியல் (பி.இ.) சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெற்றது. இதில் 1,60,834 பேர் விண்ணப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 20 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் தற்போது ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு உதவி பெறும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

www.skilltraining.tn.gov.in இணையம் வாயிலாக வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 94442 96006 என்ற செல்போன் எண்ணிலும் விவரம் அறியலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் ஏழை குழந்தைகள் கட்டணமின்றி சேர்க்கப்படுவார்கள்.

இலவச சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 26-ம் தேதி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். இதன்பின் இணையதள விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு ஒப்புதல்

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை வெவ்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன. இதை தவிர்த்து அனைத்து போட்டித் தேர்வுகளையும் நடத்த தேசிய அளவில் ஒரே அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ரூ.1,517 கோடியில் தேசிய பணியாளர் நியமன தேர்வு முகமை அமைக்கப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

சென்னை பல்கலை. துணை வேந்தராக கவுரி நியமனம்

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக எஸ். கவுரியை நியமித்து ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

இவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். இதேபோல தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளத் துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *