சென்னையில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இடநெருக்கடி காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி முழுவதும் வைரஸ் பரவல் நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆ்யவு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் சென்னையில் வசிக்கும் மக்களில் ஒரு லட்சம் பேரில் 1,122 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.