வருமான வரி வழக்குகளுக்கு அபராதம் தள்ளுபடி செய்யும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் விவத் சே விஷ்வாஸ் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி வருமான வரித் துறை, நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளுக்கு அபராதம், வட்டித் தள்ளுபடி செய்யப்படுகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே வருமான வரி வழக்கு தொடர்பாக டிசம்பர் மாதத்துக்குள் விண்ணப்பித்து அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் வழக்கு தொடர்பான தொகையை செலுத்தலாம் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.