நடிகை டாப்ஸி ரூ.25 கோடி.. காஷ்யப் ரூ.300 கோடி மோசடி… செய்திருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். இவர் தற்போது இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். நடிகை டாப்ஸி ரூ.25 கோடி அளவுக்கு வருமான வரி மோசடி செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.