வருமான வரி தாக்கலுக்கு நவ.30 வரை காலஅவகாசம்

வருமான வரி தாக்கலுக்கு நவ.30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி கடந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜூலை 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்பின் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித் துறையின் உயர் அதிகாரி ராஜராஜேஸ்வரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *