இன்டேன் சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண் திட்டம் நவ. 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
“வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில் வாடிக்கையாலர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
நவம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் இன்டேன் வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை சிரமம் இன்றி செய்யலாம்” என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.