நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாக உள்ள லியோ படத்தில் ஆடியோ லாஞ்ச், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை போலீஸார் ஆடியோ லாஞ்சுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அதனால் சன்டிவியின் யூடியூப்பிலும் ரோகினி திரையரங்கிலும் ஆடியோ லாஞ்ச் நடத்தப்பட்டது. ரோகினி தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் அருவருக்கத்தக்க வசனங்கள் பேசுவதாக புதிய சர்ச்சை எழுந்தது. தற்போது நடனக்குழுவினர் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நடிகர் விஜயின் லியோ படம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.