நானும் போகிறேன் பிக்பாஸ் – எழுத்தாளர் பவா செல்லத்துரையின் மனநிலையில் இன்னொரு போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து நானும் போறேன் என்று மாயா சொல்ல, அவரை பிக்பாஸ் வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார். அந்த அறையில் பிரதீப்போட தங்கறத்துக்கு என்ன பயமா இருக்கா பாதுகாப்பா பீல் பண்ணலை சீக்கிரமா வெளியே போக முடிவு செய்வேன்னு நான் நினைக்கல ஆனா என்னால் முடியவில்லை என்று மாயா சொல்ல இப்ப மணி என்ன ஆகுது நடுராத்திரி என பிக்பாஸ் எச்சரித்ததோடு எங்க டீம் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மாயாவுக்கு பிக்பாஸ் அண்ணன் இருக்கிறேன், தைரியமாக இருங்கள் என்று கூறுகிறார். அதே மனநிலையில் எழுத்தாளர் பவா செல்லத்துரையும் இருக்கிறார். பவாவின் மனநிலை, உடல்நிலையை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அவரை வெளியே அனுப்ப முடிவு செய்தார்.

ஸ்மால் வீட்டில் மரியாதையில்லாமல் பேசுகிறார் என்று ஜோவிகாவைப் பற்றி புகார்கள் உள்ளன. அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் கூல் சுரேஷின் காமெடிகள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக அழுகிய தேங்காய் குறித்து அவர், பிக்பாஸ் இந்த தேங்காயை அண்ணாச்சி கடையில் வாங்கியிருந்தா மாத்தி கொடுப்பாரு என்று சொல் பிக்பாஸ் வீட்டுக்குள் சிரிப்பலை. அகஷ்யா மீது விஷ்ணு எரிச்சலில் இருக்கிறார். அதனால் தனியாக சென்று அக்ஷயா அழுதது மற்றவர்களின் கண்களையும் குளமாக்கின. இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *