சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் சூழலில் அந்த சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மரணமடைந்தார். அதன்பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமூர்த்தி ஆதிகுணசேகரனாக நடித்து வருகிறார்.

திடீரென வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்ற ஆதிகுணசேகரன், நீண்ட நாள்களுக்குப்பிறகு வீட்டுக்கு திரும்பி வருவதைப் போல கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் வந்த ஆதிகுணசேகரனான நடிகர் வேலராமமூர்த்தி போலீஸை தாக்கிய குற்றச்சாட்டில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

அவரைத் தேடி தம்பிகள் ஞானசேகரனும் கதிரும் மாப்பிள்ளை கரிகாலனும் ஆடிட்டர், வழக்கறிஞர்கள் காவல்நிலையத்துக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு ஆதிகுணசேகரன் இல்லை. 10-ம் தேதி நடந்த எபிசோட்டில் விசாலாட்சியின் கேள்விகளுக்கு மருமகள்கள் ஜனனி, ஈஸ்வரி, பேரன் தர்ஷன், பேத்தி தர்ஷினி ஆகியோர் பதிலடி கொடுக்கிறார்கள். அதனால் ஆடிபோயிருக்கிறார் விசாலாட்சி.

இந்தச் சூழலில் நீண்ட நாள்களுக்குப்பிறகு கையில் பையுடன் ஜனனியின் அப்பா வீட்டுக்கு வந்து சம்பந்தியை வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிக்கு அழைக்க வந்ததாக சொல்கிறார். அதனால் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தியை ஒவ்வொரு எபிசோடிலும் பார்க்க வேண்டும் என ஆசை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.