சன்டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்தது. குறிப்பாக ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து, சீரியலில் உள்ள பெண்களை அடிமைத்தனம் படுத்தும் காட்சிகளைப் பார்க்கும்போது ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால் எதிர்பாரதவிதமாக மாரிமுத்து உயிரிழந்ததால் ஆதிகுணசேகரனாக நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இவர் நடித்த காட்சிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒன்றிரண்டு எபிசோட்களில் மட்டும் தலைகாட்டிய வேலராமமூர்த்தியை தினமும் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. போலீசாரின் பிடியிலிருக்கும் ஆதிகுணசேகரன் மீண்டும் வீட்டுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆதிகுணசேகரன் இல்லாமல் விசாலாட்சி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி, ஜான்சிராணி, ஞானசேகரன், கதிர், சக்தி, கரிகாலன் மற்றும் குழந்தைகளைக் கொண்டு நேற்று நடந்த எபிசோட் முடிந்திருக்கிறது. இதில் ஜான்சிராணிக்கும் ரேணுகாவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்திலேயே கடந்த 11-ம் தேதி நடந்த இரவு எதிர்நீச்சல் முடிவடைந்திருக்கிறது. அதோடு கதிர், ஞானசேகரன், கரிகாலன் ஆகியோர் காரில் வருவதைப் போல காட்சியும் ஜனனியின் அப்பாவுக்கும் ஜனனிக்கும் நடந்த வாக்குவாதத்தோடு தொடரும் என முடித்திருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனின் கதாபாத்திரத்தைத்தான் ரசிகர்கள் ஆவலோடு ரசித்து பார்த்து கமெண்ட்ஸ்களை கொடுத்து வந்தநிலையில் அவரே இல்லாமல் எதிர்நீச்சலை இயக்கினால் நிச்சயம் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையாது. எனவே ஆதிகுணசேகரனை மீண்டும் களமிறக்கி கதையை சூடுபிடிக்க வைப்பரா இயக்குநர் திருச்செல்வம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.