சன்டிவியில் தினந்தோறும் இரவில் ஒளிப்பரப்பாகி மக்களின் மனதில் தன்கென்று ஒரு இடம்பிடித்த சீரியல்தான் கயல். இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிலும் தொடர்ந்து முன்னிலையிலிருந்து வருவதோடு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அப்பாவை இழந்த ஏழ்மை குடும்பத்தின் மூத்த மகளாக பிறக்கும் கயல், தன்னுடைய சகோதர, சகோதரிகளின் வாழ்க்கைக்காக மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவரும் ஒரு கதாபாத்திரம்.

இந்தக் கதாபார்த்திரத்தில் கர்நாடக மாநிலம் , பெங்களூருவைச் சேர்ந்த சைத்ரா லதா ரெட்டி என்பவர் நடித்து வருகிறார். வேறுமாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் குடும்பங்களின் மகளாகவே கயல் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய நண்பனான எழில், தன்னைக் காதலிப்பது தெரிந்தாலும் குடும்பத்துக்காகவே அந்தக் காதலை நிராகரித்து வரும் கயல், தன்னுடைய பெரியப்பா தர்மலிங்கத்தோடும் பெரியம்மா வடிவோடும் சண்டை போட்டு வெற்றி பெறுவதே கதையின் ஹைலைட்ஸ்.
பெரியப்பா தர்மலிங்கத்தின் மகள் ஆர்த்திக்கும் கயலின் நண்பன் எழிலுக்கும் நடக்க இருந்த திருமணத்தில் எதிர்பாரத திருப்பங்களை வைத்து கதையை சூடுபிடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அந்தத் திருமணத்தில் கயலின் தங்கை ஆனந்தி, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பிரபுவைக் கொலை செய்து விடுகிறாள். தங்கை ஆனந்தியை போலீஸாரிடமிருந்து காப்பாற்ற கயல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் நடிகை கயல் தன்னுடைய இன்ஸ்ட் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் கறவை மாட்டிலிருந்து கயல் பால் கறக்கிறார். மேலும் பால் பண்ணை தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே சில கோலிவுட் பிரபலங்கள் நடிப்பைத் தாண்டி பிசினஸ்மேன்களாகவும் பிசினஸ்உமன்களாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டியும் இடம்பிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் சைத்ரா ரெட்டி.