சன்டிவி சீரியல் குடும்பத்தின் புதிய வரவு சிங்கப்பெண்ணே சீரியல். இந்த சீரியலில் ஹீரோயினாக ஆனந்தி என்பவர் நடித்து வருகிறார். சீரியலின் ப்ரோமோவிலேயே அவரை சுட்டிப்பெண்ணாக காண்பித்திருந்தனர். ஆனந்தியாக நடிப்பவரின் உண்மையான பெயர் மணிஷா மகேஷ். இவரின் சொந்த ஊர் கேரள மாநிலம் அருவைக் குளத்தைச் சேர்ந்தவர். 22 வயதாகும் மணிஷா, கல்லூரி படிப்பை மதுரையில் பி.எஸ்.சி ஆர்லைன்ஸ் படித்திருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வந்த மணிஷா, மலையாள சின்னத்திரையில் நடித்திருக்கிறார். இவரின் முதல் தமிழ் சீரியல் சிங்கப்பெண்ணே. இவரின் செல்லப்பெயர் அம்மு. இவருக்கு ஒரு தங்கை உள்ளார். அப்பாவின் பெயர் மகேஷ். கேரளாவிலிருந்து மீண்டும் ஒரு சீரியல் நடிகை தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். இவர் நடனம், மார்டலிங் என ரொம்பவே பிஸியாக இருந்து வந்திருக்கிறார்.