விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் படுசூப்பராக சென்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் அந்த வீட்டுக்குள் இருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் இருந்து வருகிறது. முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த சில தினங்களில் எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாகவே வெளியேறினார். அதனால் இரண்டாவது வாரத்தில் யாரும் வெளியேற்றப்படவில்லை. மூன்றாவது வாரமான இன்று வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த வாரத்தில் வினுஷா, மாயா, அக்ஷயா ஆகிய மூன்று பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. அதனால் இவர்கள் மூன்று பேரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீர் திருப்பமாக பிக்பாஸ் சீசனின் முதல் வார கேப்டன் விஜய் வர்மா வெளியேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று இரவு நடிகர் கமலஹாசன், இந்த வாரம் யார் வெளியேற்றப்படவுள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவார்.

ஆனால் அதற்குள் விஜய் வர்மா, வெளியேற்றம் என்ற தகவல் பிக்பாஸ் வீட்டிலிருந்து கசிந்திருப்பது ரசிகர்களின் ஹாட்பீட்டை எகிற வைத்திருக்கிறது.