‘நடிப்பு ராட்சசி’- எதிர்நீச்சல் சீரியல் நந்தினி யார் ?

எதிர்நீச்சல் சீரியலில் அப்பாவியான முகம், கதிரிடம் அடிவாங்கும் மனைவி என்ற நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சென்னையைச் சேர்ந்த ஹரிபிரியா. இவர் விஸ்காம் பிஎஸ்சி சைக்கலாஜி படித்திருக்கிறார். அதோடு நடனம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஹரிபிரியாவின் அம்மா ஆசிரியையாக வேலைப்பார்த்திருக்கிறார். இவர்தான் தன்னுடைய மகள் ஹரிபிரியாவை நடிகையாக ஆசைப்பட்டு கனா காணும் காலங்களில் நடிக்க விண்ணப்பித்திருக்கிறார்.

அதில் தேர்வாகிய ஹரிபிரியா, பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்ற சீரியலில் நடித்தார். அப்போதுதான் அவர் நடிகர் விக்னேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹரிபிரியாவுக்கும் விக்னேஷிக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

அதனால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது ஹரிபிரியா தன்னுடைய மகனோடு வசித்து வருகிறார். அதன்பிறகு ஹரிபிரியா சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்தச் சூழலில்தான் சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் கொடுமைக்கார கணவனுக்கு மனைவியாக ஹரிபிரியா நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் கோபம், நக்கல் பேச்சுக்கு என்றுமே தனியிடம் இருந்து வருகிறது. நந்தினி கதாபாத்திரத்துக்கு முன்பு ஹரிபிரியா நடித்த இசை கதாபாத்திரத்துக்கும் இன்னமும் ஒரு தனியிடம் இருந்து வருகிறது. டிக்டாக் காலக்கட்டத்தில் ஹரிபிரியாவும் விக்னேசும் பதிவு செய்த வீடியோக்கள் ஹிட் அடித்தன. ஹரிபிரியாவுக்கு சின்ன வயதிலிருந்தே இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஆனால் அதைவிட நடிகையாக நம்ம வீட்டு பெண்ணாக ஒவ்வொரு வீடுகளிலும் எதிர்நீச்சல் சீரியல் நந்தினியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் ஹரிபிரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *