கொரோனா.. இந்தியாவில் 92,071 பேர்.. தமிழகத்தில் 5,697 பேர்..

கொரோனா.. இந்தியாவில் 92,071 பேர்.. தமிழகத்தில் 5,697 பேர்.. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 92 ஆயிரத்து 71 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 48 லட்சத்து 46 ஆயிரத்து 427 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 லட்சத்து 80 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,136 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 79 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை முகாமில் ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை முகாமில் ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

கர்நாடகாவில் 9,894 பேருக்கு தொற்று

மகாராஷ்டிராவில் நேற்று 22 ஆயிரத்து 543 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 308 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர.

இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 61 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 90 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 29 ஆயிரத்து 531 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 9 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 59 ஆயிரத்து 445 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 958 பேர் குணமடைந்துள்ளனர். 99 ஆயிரத்து 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

ஆந்திராவில் 9,536 பேருக்கு தொற்று

ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 536 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 123 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 139 பேர் குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் நேற்று 6 ஆயிரத்து 205 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 36 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 485 பேர் குணமடைந்துள்ளனர். 68 ஆயிரத்து 122 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
பெங்களூருவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

தமிழத்தில் 68 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 697 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 பேர் குணமடைந்துள்ளனர். 46,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 68 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 989 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 485 பேர், செங்கல்பட்டில் 324 பேர், சேலத்தில் 282 பேர், திருவள்ளூரில் 283 பேர், கடலூரில் 268 பேர், திருப்பூரில் 262 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 3,215 பேருக்கு தொற்று

ஒடிசாவில் 31,539 பேர், சத்தீஸ்கரில் 31,505 பேர், தெலங்கானாவில் 30,532 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் நேற்று 3,215 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலத்தில் 1,14,033 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 82,345 பேர் குணமடைந்துள்ளனர். 31,156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 466 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 28,812 பேர், அசாமில் 28,161 பேர், மேற்குவங்கத்தில் 23,624 பேர், மத்திய பிரதேசத்தில் 20,487 பேர், ஹரியாணாவில் 20,079 பேர், பஞ்சாபில் 19,787 பேர், காஷ்மீரில் 17,481 பேர், ராஜஸ்தானில் 16,654 பேர், குஜராத்தில் 16,407 பேர், ஜார்க்கண்டில் 14,336 பேர், பிஹாரில் 10,519 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *