நாடு முழுவதும் 74,442 பேர்.. தமிழகத்தில் 5,395 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும்  74,442 பேர்.. தமிழகத்தில்  5,395 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 74,442 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,23,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,86,703 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 9,34,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்தனர். 

ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,02,685 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 12,548 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,43,409 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 11,49,603 பேர் குணமடைந்துள்ளனர். 2,55,722 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 38,084 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 10,145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 6,40,661 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,15,782 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,286 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று  5,042 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2,34,928 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,49,111 பேர் குணமடைந்துள்ளனர். 84,873 பேர் சிகிச்சையில் உள்ளனர். 859 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று  6,242 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,19,256 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,58,875 பேர் குணமடைந்துள்ளனர். 54,400 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் 46,385 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 6,25,391 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,69,664 பேர் குணமடைந்துள்ளனர். 45,881 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 62 பேர் உயிரிழந்தனர். 

இதுவரை 9,846 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 1,367 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

அசாமில் 33,324 பேர், ஒடிசாவில் 29,504 பேர், சத்தீஸ்கரில் 27,548 பேர், மேற்குவங்கத்தில் 27,439 பேர், தெலங்கானாவில் 27,052 பேர், டெல்லியில் 24,154 பேர், ராஜஸ்தானில் 21,154 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக அமைச்சருக்கு கரோனா

கர்நாடக தொடக்க, உயர்நிலை பள்ளி துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்கு நேற்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், காய்ச்சலுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. எனினும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் தனிமையில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயணன், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *