இந்தியா அடிச்சா தாங்க மாட்ட… மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை

இமயமலையின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். கடந்த மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பும் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஆக்ரோஷமான மோதலும் அரங்கேறின.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்.
இந்த மோதலைத் தொடர்ந்து லடாக்கில் ஆயுதங்களையும் வீரர்களையும் இந்தியா பெருமளவில் குவித்து வைத்துள்ளது. அதோடு மட்டுமன்றி வர்த்தகரீதியாக சீனாவின் குடுமிப்பிடியை பிடித்து ஆட்சி வருகிறது. அண்மையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


இதன் தொடர்ச்சியாக மேலும் 47 சீன சீன செயலிகளுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது. எந்தெந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற முழுமையான விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்லது.


இந்த தடை இதோடு நிற்காது. சுமார் 250 சீன செயலிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பப்ஜி செயலியும் அடக்கம்.

சீன செயலியான டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை கொண்டாடும் இந்திய இளைஞர்
சீன செயலியான டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை கொண்டாடும் இந்திய இளைஞர்


சீன அரசு தெரிந்தே உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பிவிட்டுள்ளது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் வணிகரீதியாக அந்த நாட்டை ஓரம் கட்டி வருகின்றன.


உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான இந்தியாவும், சீனாவுக்கு எதிராக வர்த்தகரீதியில் சம்மட்டியால் மாறி மாறி அடித்து வருகிறது. இந்த அடியை சீனாவால் தாங்கவே முடியாது என்று உலக பொருளாதார நிபுணர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *