பறக்கும் மோப்ப நாய்கள்… இந்தியாவுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா

சீனாவுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முப்படைகளின் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான போசோடியன் -8ஐ என்ற அதிநவீன கண்காணிப்பு விமானம் இந்திய கடற்படையில் கடந்த 2009-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. இந்த வகையை சேர்ந்த 8 கண்காணிப்பு விமானங்கள் கடற்படையிடம் உள்ளன.


இவற்றில் அதிநவீன ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கிகளை எளிதில் கண்டறிய முடியும். எதிரிகளின் போர்க்கப்பல்களை ஏவுகணைகளை வீசி தாக்கி அழிக்கும் திறனும் போசோடியனுக்கு உண்டு.

அமெரிக்காவின் பிரிடேட்டர் உளவு விமானம்
அமெரிக்காவின் பிரிடேட்டர் உளவு விமானம்


ஏற்கெனவே செய்து கொண்ட புதிதாக 4 போசோடியன் -8ஐ விமானங்கள் வரும் டிசம்பரில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த மேலும் 6 விமானங்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரியுள்ளது.


மேலும் பறக்கும் மோப்ப நாய்கள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பிரிடேட்டர் -பி உளவு விமானத்தை வழங்கும்படியும் இந்தியா கோரியுள்ளது. இந்த ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா எல்லோருக்கும் விற்காது. நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கும். இந்தியாவுக்கு பிரிடேட்டர் பி விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

பிரிடேட்டர் உளவு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன ஏவுணைகள்
பிரிடேட்டர் உளவு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன ஏவுணைகள்


இந்தியாவிடம் தற்போது இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் உளவு விமானங்கள் உள்ளன. இந்த உளவு விமானங்களே சீன, பாகிஸ்தான் எல்லையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரிடேட்டர் பி ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு பணியை மட்டுல்ல. காட்டுத் தாக்குதல் நடத்தும் திறனும் கொண்டது.

அமெரிக்காவிடம் இருந்து 30 பிரிடேட்டர் பி விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 6 விமானங்களை அமெரிக்கா வழங்க உள்ளது. இதில் ராணுவம், கடற்படை, விமானப் படைக்கு தலா 2 விமானங்கள் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *