இந்தியாவும், சீனாவும் இன்று 5-வது ரவுண்ட்…

கடந்த மே மாத தொடக்கத்தில் இமயமலையின் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர்.

லடாக் எல்லையில் செல்லும் இந்திய ராணுவ வாகனங்கள்
லடாக் எல்லையில் செல்லும் இந்திய ராணுவ வாகனங்கள்

அப்போது மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பு ஏற்பட்டது.
இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. சீன தரப்பில் 350 வீரர்ககள் குவிந்திருந்தனர். இந்திய தரப்பில் 50 வீரர்கள் மட்டுமே இருந்தனர். எனினும் இந்திய வீரர்கள் தீரமுடன் போரிட்டனர்.


இதில் சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்தனர். இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக ராணுவ வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்தியாவின் ராணுவ, ராஜ்ஜியரீதியிலான நடவடிக்கைகளால் எல்லையில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது.

லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்.
லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்.


இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று இருதரப்பிடையே 5-வது சுற்று பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கியுள்ளது.லடாக்கின் பான்சோங் ஏரி, கோக்ரா பகுதிகளில் சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் உள்ளது. இந்த விவகாரம் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *