17 லட்சத்தை தாண்டி பாய்கிறது கொரோனா.. ஒரே நாளில் 54,736 பேருக்கு வைரஸ் தொற்று

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 54 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 17 லட்சத்தை 50 ஆயிரத்து 723 ஆக உயர்ந்திருக்கிறது.


புதிய வைரஸ் தொற்று நாள்தோறும் அரை, அரை லட்சமாக தாண்டுவதால் நாளை வைரஸ் பாதிப்பு 18 லட்சத்தை எளிதாக தாண்டிவிடும் என்று சுகாதார துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தனியார் காவலாளி ஒருவருக்கு சளி மாதிரி  எடுக்கப்படுகிறது.
தனியார் காவலாளி ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

5 லட்சத்து 67 ஆயிரத்து 730 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 823 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் புதிதாக 9,601 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 188 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் டெல்லியில் 1,195 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு லட்சத்து 21 ஆயிரத்தும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்கள்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்கள்.


அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 7 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, பிஹாரில் புதிய தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.
கேரளாவில் ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24 ஆயிரத்து 742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *