இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 ஆயிரத்து 42 ஆயிரத்து 360 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 82 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 20 ஆயிரத்து 482 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 10 லட்சத்து 97 ஆயிரத்து 856 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியவர் ஒருவரிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
முதியவர் ஒருவரிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 273 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 92 ஆயிரத்து 174 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 515 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 846 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 75 ஆயிரத்து 265 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 229 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 555 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 8 ஆயிரத்து 846 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 83 ஆயிரத்து 925 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 531 பேர் குணமடைந்துள்ளனர். 92 ஆயிரத்து 353 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 67,335 பேர், தமிழகத்தில் 46,633 பேர், சத்தீஸ்கரில் 35,909 பேர், ஒடிசாவில் 32,267 பேர், கேரளாவில் 32,709 பேர், தெலங்கானாவில் 30,401 பேர், டெல்லியில் 29,787 பேர், அசாமில் 29,180 பேர், மேற்குவங்கத்தில் 23,942 பேர், மத்திய பிரதேசத்தில் 21,620 பேர், பஞ்சாபில் 21,154 பேர், ஹரியாணாவில் 20,430 பேர், காஷ்மீரில் 18,678 பேர், ராஜஸ்தானில் 16,761 பேர், குஜராத்தில் 16,357 பேர், ஜார்க்கண்டில் 14,118 பேர், பிஹாரில் 13,055 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *