5-வது நாளாக 50 ஆயிரம்.. 18 லட்சத்தை தொட்டது கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று 5-வது நாளாக இன்றும் 50 ஆயிரத்தை எளிதாக தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.


இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 18 லட்சத்து 3 ஆயிரத்தை 966 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 771 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நோயாளி ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் நோயாளி ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் நாள்தோறும் புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தொடுகிறது.

கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்லும் மக்கள்.
கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்லும் மக்கள்.

கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்குவங்கத்தில் நாள்தோறும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வைர வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆந்திராவில் ஒரு லட்சத்துக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரது மகள் மற்றும் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய 6 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவரோடு தொடர்பில் இருந்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *