இந்தியாவில் 36,470 பேர்.. தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் இறுதியில் நாள்தோறும் தோராயமாக 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நடப்பு அக்டோபரில் கடந்த 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சராசரியாக 49,909 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் நாடு முழுவதும் இன்று 36,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக தினசரி வைரஸ் தொற்று 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது.
இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. இதில் 72,01,070 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 63,842 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 90.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 6,25,857 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,19,502 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 3,645 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,48,665 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,70,660 பேர் குணமடைந்துள்ளனர். 1,34,657 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 43,348 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 1,901 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 8,08,924 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,73,548 பேர் குணமடைந்துள்ளனர். 28,770 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,606 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 3,130 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 8,05,947 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,19,558 பேர் குணமடைந்துள்ளனர். 75,442 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,947 பேர் உயிரிழந்துல்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,14,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,75,518 பேர் குணமடைந்துள்ளனர். 27,734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,983 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 209 பேர், செங்கல்பட்டில் 144 பேர், திருவள்ளூரில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 1,807 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,72,077 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,38,521 பேர் குணமடைந்துள்ளனர். 26,652 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,904 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 5,457 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,02,674 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,09,032 பேர் குணமடைந்துள்ளனர். 92,161 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,376 பேர் உயிரிழந்துள்ளனர்.