அம்மாடியோவ்.. ஒரே நாளில் 45,720 பேருக்கு கொரோனா.. 1,129 பேர் பலி

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் வகையில் 7 லட்சத்து 82 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


முதல்முறையாக உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1, 129 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிப்பு 29 ஆயிரத்து 861 ஆக உயர்ந்திருக்கிறது.


வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவைவிட இந்தியாவில் வைரஸ் தொற்று சதவீதம் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது. உயிரிழப்புகளை பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால் வைரஸ் பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா முதலிடத்துக்கு தள்ளப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் டெல்லி 3-ம் இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனினும் அந்த மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கர்நாடகாவில் 75 ஆயிரம் பேர், ஆந்திராவில் 64 ஆயிரம் பேர், உத்தர பிரதேசத்தில் 55 ஆயிரம் பேர், குஜராத்தில் 51 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *