மத்திய சுகாதாரத் துறை நாள்தோறும் காலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 48 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அரை லட்சத்தை எட்டித் தொடும் வகையில் வைரஸ் தொற்று உயர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 13 லட்சத்து 85 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 லட்சத்து 49 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதற்கு அடுத்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிப்பு 31 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது. புதிய வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது.