இதுவரை 60.74 லட்சம் பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது…

இதுவரை 60 லட்சம் பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது…

நாடு முழுவதும் இன்று 82 ஆயிரத்து 170 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 லட்சத்து 16 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 640 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,039 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 95 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் புதிதாக 18 ஆயிரத்து 56 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 13 லட்சத்து 39 ஆயிரத்து 232 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 லட்சத்து 30 ஆயிரத்து 15 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 73 ஆயிரத்து 646 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 35 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் கர்நாடகா

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 9 ஆயிரத்து 543 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 75 ஆயிரத்து 566 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 241 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 582 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 6 ஆயிரத்து 923 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 674 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர். 64 ஆயிரத்து 876 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 708 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் கேரளா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் கேரளா 5-வது இடத்தில் இருந்தது. அந்த மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் அந்த மாநிலம் 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.

கேரளாவில் இன்று 4,538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 1,79,922 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,268 பேர் குணமடைந்துள்ளனர். 57,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 697 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 55,786 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,283 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 587 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 249 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் 35,006 பேர், சத்தீஸ்கரில் 31,661 பேர், தெலங்கானாவில் 29,673 பேர், அசாமில் 29,350 பேர், டெல்லியில் 29,228 பேர், மேற்குவங்கத்தில் 25,723 பேர், மத்திய பிரதேசத்தில் 22,431 பேர், ராஜஸ்தானில் 19,700 பேர்,

பஞ்சாபில் 18,556 பேர், காஷ்மீரில் 18,199 பேர், குஜராத்தில் 16,633 பேர், ஹரியாணாவில் 16,485 பேர், பிஹாரில் 12,827 பேர், ஜார்க்கண்டில் 12,433 பேர், உத்தராகண்டில் 10,799 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *