நாடு முழுவதும் 85,362 பேர்… தமிழகத்தில் 5,647 பேருக்கு கொரோனா…

நாடு முழுவதும் 85,362 பேர்… தமிழகத்தில் 5,647 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 85 ஆயிரத்து 362 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்து 3 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இதில் 48 லட்சத்து 49 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 969 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,089 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 93 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 17 ஆயிரத்து 794 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 757 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 73 ஆயிரத்து 190 பேர் சிகிச்சையில் உள்ளனர். 34 ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

வைரஸ் பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 655 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 57 ஆயிரத்து 212 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 302 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 493 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 7 ஆயிரத்து 73 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 458 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 606 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 4 ஆயிரத்து 256 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3 லட்சத்து 78 ஆயிரத்து 533 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக போலீஸ்காரரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக போலீஸ்காரரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

இதில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 686 பேர் குணமடைந்துள்ளனர். 59 ஆயிரத்து 397 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில்

5-வது இடத்தில் உள்ள கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் முதல்முறையாக புதிய தொற்று 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை 1,67,939 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 530 பேர் குணமடைந்துள்ளனர். 52 ஆயிரத்து 678 பேர் சிகிச்சையில் உள்ளனர். 656 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 647 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 பேர் குணமடைந்துள்ளனர். 46,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 5,528 பேர் கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,187 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கடந்த இரு நாட்களாக சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. கோவையில் 656 பேர், சேலத்தில் 296 பேர், செங்கல்பட்டில் 259 பேர், திருவள்ளூரில் 235 பேர், கடலூரில் 212 பேர்,

திருப்பூரில் 188 பேர், தஞ்சாவூரில் 179 பேர், விழுப்புரத்தில் 161 பேர், காஞ்சிபுரத்தில் 148 பேர், நீலகிரியில் 145 பேர், திருவாரூரில் 141 பேர், திருவாரூரில் 141 பேர், ஈரோட்டில் 140 பேர், வேலூரில் 138 பேர்,

திருவண்ணாமலையில் 136 பேர், கன்னியாகுமரியில் 96 பேர், தர்மபுரியில் 95, திருநெல்வேலியில் 90, தூத்துக்குடியில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் 34,897 பேர், சத்தீஸ்கரில் 30,928 பேர், டெல்லியில் 30,867 பேர், தெலங்கானாவில் 30,334 பேர், அசாமில் 30,034 பேர்,

மேற்குவங்கத்தில் 25,374 பேர், மத்திய பிரதேசத்தில் 22,198 பேர், பஞ்சாபில் 19,937 பேர், காஷ்மீரில் 19,170 பேர்,

ராஜஸ்தானில் 19,030 பேர், ஹரியாணாவில் 18,032 பேர், குஜராத்தில் 16,478 பேர், பிஹாரில் 12,773 பேர், ஜார்க்கண்டில் 12,533 பேர், உத்தராகண்டில் 10,934 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *