தினசரி கொரோனா தொற்று.. ஒரு லட்சத்தை நெருங்கியது…

தினசரி கொரோனா தொற்று..ஒரு லட்சத்தை நெருங்கியது…இது இந்தியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர்.

9 லட்சத்து 43 ஆயிரத்து 480 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 1,209 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 76 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் அந்த வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில்கூட நாள்தோறும் 35 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

பணியிடத்தில் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
பணியிடத்தில் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வளவு வைரஸ் தொற்று பதிவாகவில்லை.

நாட்டின் தினசரி கரோனா வைரஸ் தொற்றில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் 57 சதவீத புதிய வைரஸ் தொற்று பதிவாகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதாவது மகாராஷ்டிராவில் 24.28%, ஆந்திராவில் 10.54%, கர்நாடகாவில் 9.55%, உத்தர பிரதேசத்தில் 7.24%, தமிழகத்தில் 5.73 சதவீதம் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதர மாநிலங்களில் 42.67 சதவீத வைரஸ் தொற்று பதிவாகிறது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் நேற்று 23 ஆயிரத்து 446 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு இதுவரை 9 லட்சத்து 90 ஆயிரத்து 795 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவிந் புனே நகர மருத்துவமனை வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது
மகாராஷ்டிராவிந் புனே நகர மருத்துவமனை வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது

இதில் 7 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 61 ஆயிரத்து 798 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 495 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 9 ஆயிரத்து 217 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 30 ஆயிரத்து 947 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 454 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 937 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 10 ஆயிரத்து 176 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 687 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர். 97 ஆயிரத்து 338 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 702 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

தேசிய வைரஸ் பாதிப்பில் உத்தர பிரதேசம் 4-வது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 66 ஆயிரத்து 317 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5,528 பேர் கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தெலங்கானாவில் 32,195 பேர், ஒடிசாவில் 30,529 பேர், அசாமில் 29,332 பேர், சத்தீஸ்கரில் 29,332 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 988 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 73 ஆயிரத்து 904 பேர் குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்து 877 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 25,416 பேர், மேற்குவங்கத்தில் 23,377 பேர், மத்திய பிரதேசத்தில் 18,433 பேர், ஹரியாணாவில் 18,332 பேர், பஞ்சாபில் 18,088 பேர், குஜராத்தில் 16,198 பேர்,

ராஜஸ்தானில் 15,702 பேர், ஜார்க்கண்டில் 15,447 பேர், பிஹாரில் 15,239 பேர், காஷ்மீரில் 14,074 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *