கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,148 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 434 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 17,834 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1.8 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 94 லட்சம் பேரும், டெல்லியில் 89 ஆயிரம் பேரும், குஜராத்தில் 33 ஆயிரம் பேரும், உத்தர பிரதேசத்தில் 24 ஆயிரம் பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி அளித்தாலும், புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *