நாடு முழுவதும் ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. முதல்முறையாக புதிய வைரஸ் தொற்று 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் புதிதாக 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுமொத்தமாக 9 லட்சத்து 68 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 606 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வைரஸ் தொற்று கணிசமாக உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.