இந்தியாவில் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் புதிதாக 8,348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 3,00,937 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,65,663 பேர் குணமடைந்துள்ளனர். 1,23,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,596 பேர் உயிரிழந்துள்ளனர்.


தலைநகர் டெல்லியில் புதிதாக 1,475 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 1,21,582 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,01,274 பேர் குணமடைந்துள்ளனர். 16,711 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 3,597 பேர் உயிரிழந்துள்ளனர்.


கர்நாடகாவில் 4,537 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 59,652 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 21,775 பேர் குணமடைந்துள்ளனர். 36,637 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 1,240 பேர் உயிரிழந்துள்ளனர்.


குஜராத்தில் 47,036, உத்தர பிரதேசத்தில் 47,036, ஆந்திராவில் 44,609, தெலங்கானாவில் 43,780, மேற்குவங்கத்தில் 40,209, ராஜஸ்தானில் 28,500, ஹரியாணாவில் 25,547, பிஹாரில் 25,136, அசாமில் 22,918, மத்திய பிரதேசத்தில் 21,763, ஒடிசாவில் 16,701, காஷ்மீரில் 13,198 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் நேற்று 821 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 12,480 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,371 பேர் குணமடைந்துள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர்.


மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “நாடு முழுவதும் ஒரே நாளில் 38,902 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 10,77,618 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். 3,73,379 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 543 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 26,816 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *