விறுவிறுவென்று உச்சாணிக்கு ஏறுகிறது.. ஒரே நாளில் 60,962 பேருக்கு கொரோனா.. 23 லட்சத்தை தொட்டது வைரஸ் தொற்று

உலகளாவிய அளவில் 2 கோடியே 5 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு கோடியே 34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 154 பேர் உயிரிழந்துள்ளனர்.சர்வதேச கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அந்த நாட்டில் 53 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 27 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 23 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 31 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 22 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 7 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரேசிலில் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

தலைநகர் டெல்லிய்ல ஒரு குழந்தைக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லிய்ல ஒரு குழந்தைக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

அந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் நாள்தோறும் 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 60 ஆயிரத்து 963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஒரே நாளில் 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்து 91 ஆக உயர்ந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் புதிதாக 11 ஆயிரத்து 88 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 601 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பையில் அரசு அலுவலக கட்டிடம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மும்பையில் அரசு அலுவலக கட்டிடம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

1,48,860 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளி ல் 256 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் புதிதாக 9 ஆயிரத்து 24 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 549 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 749 பேர் குணமடைந்துள்ளனர். 87 ஆயிரத்து 597 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 ஆயிரத்து 203 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.


மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதிதாக 6 ஆயிரத்து 257 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 611 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்த்து 5 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுல்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்.

79 ஆயிரத்து 614 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3 ஆயிரத்து 398 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 பேர் குணமடைந்துள்ளனர்.

52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 159 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசம், பிஹார், மேற்குவங்கம், தெலங்கானா, அசாம், குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், கேரளாவிலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.


இந்தியாவில் புதிய வைரஸ் தொற்று 60 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவானால் வெகு விரைவில் உலகளாவிய அளவில் 2-வது இடத்துக்கு முன்னேறிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *