கொரோனா எகிறுகிறது.. 29 லட்சத்தை தாண்டியது…

கொரோனா வைரஸ் தொற்று எகிறுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 7-ம் தேதி முதல் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 11, 17, 18-ம் தேதிகளில மட்டும் 60 ஆயிரத்துக்கு கீழ் வைரஸ் தொற்று குறைந்தது.

கடந்த இரு நாட்களாக புதிய தொற்று 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஒரே நாளில் 68,898 தொற்று

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 29 லட்சத்து 5 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 லட்சத்து 58 ஆயிரத்து 947 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 92 ஆயிரத்து 28 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 983 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 54 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 14,492 பேர்

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 43 ஆயிர்தது 289 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 393 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 385 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அங்கு இதுவரை 2.5 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 3.61 லட்சம் பேர்


தமிழகத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று 5 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கொரோனா பரிசோதனைக்கு வந்த நோயாளி ஒருவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பபடுகிறது.
கொரோனா பரிசோதனைக்கு வந்த நோயாளி ஒருவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பபடுகிறது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 3 லட்சத்து ஆயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சையில் உள்ளனர்

கேரளாவில் 52 ஆயிரம்

கேரளாவில் நேற்று 1,968 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 52 ஆயிரத்து199 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33 ஆயிரத்து 828 பேர் குணமடைந்துள்ளனர். 18 ஆயிரத்து 123 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 139 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 767 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1,67,510 பேர், மேற்குவங்கத்தில் 1,25,922 பேர், பிஹாரில் 1,12,437, தெலங்கானாவில் 97,424, அசாமில் 84,317, குஜராத்தில் 81,942, ஒடிசாவில் 67,122, ராஜஸ்தானில் 65,289 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *