கொரோனா.. 2-வது நாளாக 70,000 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் 2-வது நாளாக ஒரே நாளில் 70,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 2 கோடியே 31 லட்சம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரே கோடியே 57 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 57 லட்சத்து 98 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அன்டிபாடி டெஸ்டுக்காக ஒருவரின் ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா அன்டிபாடி டெஸ்டுக்காக ஒருவரின் ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்த நாட்டில் 35 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 878 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 லட்சத்து 22 ஆயிரத்து 577 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நோயாளி ஒருவரின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நோயாளி ஒருவரின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 55 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 14 ஆயிரத்து 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அங்கு 6 லட்சத்து 57 ஆயிரத்து 450 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 21 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் 3 லட்சத்து 34 ஆயிரம் பேரும் கர்நாடகாவில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

2-ம் இடம் நோக்கி இந்தியா


இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த நாடுகளில் புதிய வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரேசிலில்கூட நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில் நாள்தோறும் 70 ஆயிரத்தை நெருங்கும் வகையில் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

பிரேசிலில் தற்போது 35 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் தொற்று 30 லட்சமாக உயர்ந்துள்ளது. வெகுவிரைவில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-வது இடத்துக்கு சென்றுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *