ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா.. 30 லட்சத்தை தாண்டியது தொற்று…

ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த வைரஸ் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகளாவிய அளவில் இதுவரை 2 கோடியே 33 லட்சத்து 97 ஆயிரம் பேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கோடியே 59 லட்சத்து 18 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 8 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலிடத்தில் அமெரிக்கா

சர்வதேச வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் 58 லட்சத்து 41 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 31 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 25 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 35 லட்சத்து 82 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 27 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஏழரை லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மும்பையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக செல்லும் சுகாதார ஊழியர்கள்.
மும்பையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக செல்லும் சுகாதார ஊழியர்கள்.

ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

912 பேர் உயிரிழப்பு

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் 69 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 30 லட்சத்து 44 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 லட்சத்து 80 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 லட்சத்து 7 ஆயிரத்து 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 912 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 14 ஆயிரத்து 492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 942 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 21 ஆயிர்தது 995 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

ஆந்திராவில் நேற்று 10 ஆயிரத்து 276 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 7 ஆயிரத்து 330 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 876 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 82 ஆயிரத்து 693 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1,82,453 பேர்

கேரளாவில் நேற்று 2 ஆயிரத்து 172 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 56 ஆயிரத்து 354 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1,82,453 பேர், மேற்குவங்கத்தில் 1,35,596 பேர், பீகாரில் 1,19,529 பேர், அசாமில் 89,468 பேர், குஜராத்தில் 85,523 பேர், ஒடிசாவில் 75,537 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 16 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 138 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிர்தது 594 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *