90 லட்சத்தை கடந்தது கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது.

நாடு முழுவதும் இன்று 45 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்து 4 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. இதில் 84 லட்சத்து 28 ஆயிரத்து 409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5 ஆயிரத்து 535 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 17 லட்சத்து 63 ஆயிரத்து 55 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 லட்சத்து 35 ஆயிரத்து 971 பேர் குணமடைந்துள்ளனர். 80 ஆயிரத்து 728 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46 ஆயிரத்து 356 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று ஆயிரத்து 849 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு தற்போது 25 ஆயிரத்து 188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று ஆயிரத்து 316 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 16 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளணர். 6 ஆயிரத்து 910 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 677 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 705 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 147 பேர், செங்கல்பட்டில் 125 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 28 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 67 ஆயிரத்து 831 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆயிரத்து 997 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2,532 பேர், டெல்லியில் 7,546 பேர், மேற்குவங்கத்தில் 3,620 பேர், ஒடிசாவில் 868 பேர், தெலங்கானாவில் 894 பேர், ராஜஸ்தானில் 2,549 பேர், பிஹாரில் 689 பேர், சத்தீஸ்கரில் 2,149 பேர், அசாமில் 175 பேர், ஹரியாணாவில் 2,212 பேர், குஜராத்தில் 1,340 பேர், மத்திய பிரதேசத்தில் 1,363 பேர், பஞ்சாபில் 782 பேர், ஜார்க்கண்டில் 230 பேர், காஷ்மீரில் 560 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *