கொஞ்சம் இ(ர)றங்கியது கொரோனா.. ஒரே நாளில் 53,601 பேருக்கு வைரஸ் தொற்று

கடந்த வாரம் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அரைலட்சமாக இருந்தது. கடந்த 4 நாட்களாக புதிய கொரோனா தொற்று 60 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்தது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை விட இந்தியாவில் புதிய வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது.


இந்த சூழ்நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 601 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 62 ஆயிரத்தை தாண்டி அச்சுறுத்திய கொரோனா இன்று கொஞ்சம் இ(ர)றங்கி 53 ஆயிரமாக குறைந்துள்ளது.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் எடியூரப்பா நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் எடியூரப்பா நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

படிப்படியாக வைரஸ் தொற்று குறைந்து பூஜ்ஜியமாக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பம்.
இப்போதைய நிலையில் நாடு முழுவதும் 22 லட்சத்து 68 ஆயிரத்து 676 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 லட்சத்து 68 ஆயிரத்து 676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒரே நாளில் 871 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 45 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 9 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 513 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மருத்துவமனையில் கவச உடையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள்.
டெல்லி மருத்துவமனையில் கவச உடையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள்.


அண்டை மாநிலமான ஆந்திராவில் நேற்று 7 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 4 ஆயிரத்து 267 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
உத்தர பிரதேசத்தில் 1,22,609 பேர், மேற்குவங்கத்தில் 95,554 பேர், தெலங்கானாவில் 80,751 பேர், பிஹாரில் 79,451 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் நேற்று 1,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 35,515 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,616 பேர் குணமடைந்துள்ளனர். 12,740 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *