இந்தியாவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத் துறை நாள்தோளும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியான புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 97 ஆயிரத்து 412 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் 2-ம் இடம்


மாநிலங்களை பொறுத்தவரை 2 லட்சத்து 66 ஆயிரம் வைரஸ் பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேருடன் தமிழகம் 2-ம் இடத்திலும், 99 ஆயிரம் பேருடன் டெல்லி 3-ம் இடத்திலும் உள்ளன.


உலகளாவிய வைரஸ் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த சில மாதங்களில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்துக்கு செல்லும் அபாயம் உள்ளது என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *