கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.டெல்லியில் ஒரு லட்சம் பேர், குஜராத்தில் 37ஆயிரம், உத்தர பிரதேசத்தில் 29 ஆயிரம் பேர், தெலங்கானாவில் 27 ஆயிரம் பேர், கர்நாடகாவில் 26 ஆயிரம் பேர், மேற்குவங்கத்தில் 23 ஆயிரம், ராஜஸ்தானில் 21 ஆயிரம், ஆந்திராவில் 21 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 22 ஆயிரத்துகு 752 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 20 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.